Why Should You Read This Summary?
இந்த சுருக்கத்தை நீங்க ஏன் படிக்கணும்?
நீங்க விரும்பக்கூடிய எல்லாமே உங்க கிட்ட இருக்கிறதாக உணர்கிறீங்க, ஆனாலும் நீங்க இன்னும் முழுமையடையலை. ஏன்னா உங்க ஆன்மாவுக்குள்ள ஒரு ஓட்டை இருக்கிறதுனால தான் இந்த மனநிறைவுக்கான பசி ஏற்படுது. உங்களோடவும் உங்களைச் சுத்தி இருக்கிறவங்களோடவும் நீங்க சமாதானமாக இருந்தா இதை சரிசெய்ய முடியும்.
ஆபீஸ் மீட்டிங்க்ல செஞ்ச ஒரு முட்டாள் தனமான தப்புக்காக நிம்மதி இல்லாம இருக்கீங்களா? உங்க ஈகோ நீங்க அடிக்கடி மன்னிப்பு கேட்க்கிறதை தடுக்குதா? ககல்யாணமான பல வருஷத்துக்கு அப்புறமும் கூட உங்க உறவு பிரச்சனையானதாக இருக்குதா? குழந்தைகளை திட்டாமல் அவங்களை எப்படி ஒழுங்குப்படுத்துறது? நீங்க சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு அடிமையாகிவிட்டீங்களா? நீங்க சாப்பிடுற சாப்பாடு மூலமாக உடம்புக்கு ஊட்டம் கிடைக்குது. நோக்கமுள்ள வாழ்க்கையை அடையறதுக்காக உங்க ஆன்மாவுக்கு எப்படி ஊட்டம் கொடுக்கிறது அப்படிங்கிறதை இந்த புத்தகம் உங்களுக்குக் காட்டும்.
யாரெல்லாம் இந்த சுருக்கத்தை படிக்க வேண்டும்?
- மகிழ்ச்சியையும் வெற்றியையும் தேடும் இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள்.
- தங்கள் உறவுகளில் போராடும் திருமணமான தம்பதிகள்.
- தங்கள் குழந்தைகளுக்கு நேர்மறையான குழந்தை வளர்ப்பு முறையை கடைப்பிடிக்க விரும்பும் பெற்றோர்கள்.
எழுத்தாளரைப் பத்தி:
ரிச்சர்ட் டெம்ப்லர் அப்படிங்கிறது ரிச்சர்ட் கிரேஸோட புனைப்பெயர். அவரு நிறைய சுய வளர்ச்சி சார்ந்த புத்தகங்களை எழுதினவரு. ரிச்சர்ட் ஒரு புத்தகத் தொடரை வெளியிட்டிருக்கிறாரு, இது தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் வெற்றிபெறுவதற்கான 100 விதிகளை முன்வைக்குது. அவரோட புத்தகங்களானது பெற்றோர், அன்பு மற்றும் செல்வம் மாதிரியான வாழ்க்கையோட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி இருக்குது. அவரோட எழுத்துக்கள் சுருக்கமாகவும் நேரடியானதாகவும் இருக்கிறதுனால அவரோட படைப்புகள் உலகம் முழுக்க இருக்கக்கூடிய மக்களால பாராட்டப்படுது