இது டம்மிகளுக்கான வியாபார புத்தகம். நீங்க பார்த்ததுலயே சிறப்பான வணிக புத்தகம் இது தான். நீங்க ஒரு தொழிலைத் தொடங்க விரும்புனா இந்த புத்தகம் உங்களுக்கு எல்லாத்தையுமே சுலபமாக்கும். இது நடைமுறை நுண்ணறிவுகளும் கத்துக்கிறதுக்கான சுவாரஸ்யமான கதைகளும் நிறைஞ்சது. எம்பிஏ படிக்கிறதை மறந்திடுங்க. இந்த புத்தகத்துல நீங்க சந்தோஷமான மற்றும் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாற வேண்டிய மிக முக்கியமான கருத்துகள் இருக்குது.
யாரெல்லாம்இந்தபுத்தகத்தைபடிக்கணும்?
தொழில் தொடங்க விரும்பும் எல்லாருக்கும்
அதிகம் சம்பாதிக்கவும் சொகுசா வாழவும் விரும்பும் தொழில்முனைவோருக்கு
எழுத்தாளரைப்பத்தி:
ஜோஷ் காஃப்மேன் அவர்கள் ஒரு வணிக பயிற்சியாளர், முக்கிய பேச்சாளர் மற்றும் சிறந்த விற்பனையான எழுத்தாளரும் ஆவார். ப்ராக்டர் & கேம்பிள் நிறுவனத்துல பல வருஷங்களாக பிராண்ட் மேலாளராக வேலை செய்யறாரு. அப்புறம் அவரு சொந்தமாக ஒரு தொழிலை நடத்துறது தான் தனக்கான உண்மையான அழைப்பு அப்படிங்கிறதை உணர்ந்தாரு. ஜோஷு கிட்ட எம்பிஏ எதுவும் இல்லை, ஆனால் அவரு நூற்றுக்கணக்கான வணிக புத்தகங்களைப் படிச்சிருக்கிறாரு அதோட ஆயிரக்கணக்கான மணிநேர நடைமுறை அனுபவத்தைப் பெற்றிருக்கிறாரு.