முழுமையான மற்றும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வதற்கான ரகசியம் என்ன? நீங்க விரும்பும் அனைத்தையும் பெறுவதால் அது ஏற்படுமா? இல்ல, மத்தவங்களோடு நல்ல உறவோடு இருப்பதால் ஏற்படுமா? இதற்கான பதில் இல்லை என்பதுதான். ஒரு சந்தோஷமான வாழ்க்கை என்பது உங்களோட தவறுகளோடு உங்கள ஏத்துக்கறது தான். இதை செய்வதற்கு இந்த புத்தகம் உங்களுக்கு எளிய மற்றும் வலுவான வழிகளை கற்றுக் கொடுக்கும். Alfred Adler மற்றும் அவரின் Adlerian psychology இன் படி சந்தோஷமாக இருப்பது என்பது எளிதாக அடைய கூடிய ஒன்று தான்.
யாருஇந்தசுருக்கத்தைவாசிக்கவேண்டும்?
மன அழுத்தம் மற்றும் கவலை உணர்வு கொண்ட நபர்கள்
தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு உதவி நாடும் நபர்கள்
ஊக்கம் மற்றும் உந்துதல் தேவைப்படும் நபர்கள்
80 களிலும் 90 களிலும் பிறந்தவர்கள் (Millennials )
இளைஞர்கள்
புத்தக ஆசிரியரை பற்றி:
Ichiro Kimishi, Adlerian psychology மீது மிகுந்த நம்பிக்கை உடையவர். இளைஞர்களுக்கு counselling கொடுப்பவர். அவர் Japanese Society of Adlerian Psychology இன் counsellor மற்றும் consultant. Fumitake Koga பரிசு பெற்ற எழுத்தாளர். அவர் நன்கு விற்கப்பட்ட வணிக மற்றும் non -fiction புத்தகங்களை வெளியிட்டவர்.