டிவியில அவளோட பெயரைக் கேட்டிருக்கலாம் இல்லைனா வலைப்பதிவுகள் மற்றும் பத்திரிகைகள்ல அவளைப் பத்தி படிச்சிருக்கலாம். அவரு தான் கோகோ சேனல், உலகத்துல ரொம்பவே விரும்பப்படுற ஆடம்பர பேஷன் பிராண்டுகள்ல ஒன்றோட நிறுவனர். அவளோட வாழ்க்கைக் கதை என்ன? அவள் எங்கிருந்து வந்தா? கோகோ சேனல் தன்னோட தொழிலை எப்படி தொடங்குனா, எப்படி அவள் ஒரு அசாதாரண வெற்றியை பெற்றாள்? இதைப் பத்தியும் அதோட இன்னும் பலவற்றை பத்தியும் இந்த புத்தகத்துல இருந்து தெரிஞ்சுக்குவீங்க.
யாரெல்லாம்இந்தசுருக்கத்தைபடிக்கணும்?
ஆர்வமுள்ள தொழில்முனைவோர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள்
ஃபேஷனை விரும்பக்கூடிய பெண்கள், இளம் பெண்கள், மற்றும் ஜென்டில்மேன்கள்
காதல், வணிகம் மற்றும் வெற்றியைப் பத்திற நல்ல கதைகளை விரும்பக்கூடிய யாரு வேண்டுமானாலும்.
எழுத்தாளரைப்பத்தி:
சூசன் கோல்ட்மேன் ரூபின் அவர்கள் கலை மற்றும் வரலாறு பத்தின நிறைய பல புனைகதை இல்லாத புத்தகங்களை எழுதினவரு. அவரு 50 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான கதைகளையும் எழுதியிருக்கிறாரு. சூசன் 20 வருசங்களாக UCLA வோட எழுத்து பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றினாரு. அவரு புனைகதை அல்லாதவற்றுக்கான கோல்டன் கைட் விருதைப் பெற்றிருக்கிறாரு.