Why Should You Read This Summary?
நீங்கள் ஏன் இந்த சுருக்கத்தை வாசிக்க வேண்டும்?
நம்ம எல்லோருமே நல்ல பழக்க வழக்கங்கள் உருவாக்க விரும்புவதோட மட்டுமில்லாம கெட்ட பழக்க வழக்கங்கள் விட்டுவிடணும்னு விரும்புவோம். உலக அளவுல அதிகம் விற்பனையாகக்கூடிய இந்த புத்தகம், அதை சுலபமான முறையில செய்வதற்கான பயனுள்ள வழிகளை உங்களுக்குக் கற்றுக்கொடுக்கும். நீங்க இதுக்கு முன்னாடி மாறணும்னு பலமுறை முயற்சி செஞ்சிருந்தாலும் கூட, நீங்க தோல்வி அடைஞ்சிட்டே இருந்தீங்க. சுலபமான முறையில பயன்படுத்தக்கூடிய எளிமையான உத்திகளை இங்க நீங்க கத்துக்குவீங்க. இந்த உத்திகள் நீங்க புதுசா உருவாக்கணும்னு நினைக்கிற இல்லைனா விட்டுவிடணும்னு விரும்புற எந்தவொரு பழக்கத்துக்கும் இந்த உத்திகள் உதவி செய்யும். பழக்கவழக்கங்கள் எப்படி உருவாகிறது? ஒவ்வொரு நாளும் அதை எப்படி தொடர்ச்சியாக செய்வது அப்படிங்கிறதை பற்றி இந்த புத்தகம் சொல்லிக்கொடுக்கும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள பாடங்கள் உங்களது வாழ்க்கையையே மாற்றக்கூடியதா இருக்கும்.
யாரெல்லாம் இந்த சுருக்கத்தை வாசிக்க வேண்டும்?
- நல்ல பழக்கங்களை உருவாக்க விரும்புபவர்கள்.
- கெட்ட பழக்கங்களை விட்டுவிட விரும்புபவர்கள்.
- தங்களை மேம்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள்.
எழுத்தாளரைப் பற்றி:
ஜேம்ஸ் கிளியர் ஒரு பிரபல எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார். அணு பழக்க வழக்கம்(Atomic habits) எனும் இவரது புத்தகம் உலகம் முழுவதிலும் 10 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி உள்ளது. மேலும் இவருடைய கட்டுரைகள் டைம் இதழ், நியூயார்க் டைம்ஸ் போன்ற பல பத்திரிக்கைகளில் இடம்பெற்றுள்ளன. ஜேம்ஸ் கிளியர் பார்ச்சூன் 500 போன்ற நிறுவனங்களிலும் உறையாற்றியுள்ளார். அத்தோடு மட்டுமல்லாமல் Intel, LinkedIn, Honda போன்றவை நிறுவனங்களும் இவரது வாடிக்கையாளர் பட்டியலில் அடங்குவர். இவர் பழக்கவழக்கங்கள், முடிவெடுத்தல் மற்றும் சுய முன்னேற்றம் பற்றி தொடர்ந்து பேசுவதோடு மட்டுமல்லாமல் எழுதியும் வருகிறார்.